விரதநாட்கள்

பைரவர் துதி
விரித்த பல் கதிர்கொள் சூலம்
வெடிபடு தமருகங்கை,
தரித்ததோர் கோலகால பைரவனாகி
வேழம் உரித்து உமை அஞ்சக்கண்டு
ஒண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார்
சேறைச் செந்நெறிச் செல்வனாரே

பைரவர் தோத்திரம்
சாயாத சூலதண்டாயுதனே பச்சைச் சட்டையனே
வேயார் விண்ணோர்தொழும் மேனியனே யென்மிடிதவிர்ப்பாய்
வாயாரவுன்னைத் துதிப்போர்க்கு வேண்டும்வரம்தருவாய்
தாயாகிய அப்பனே காழியாபதுத் தாரணனே!

சிவன் திருக்கோலங்களில் பைரவர் திருக்கோலமும் முக்கியமானது சிவபெருமான் வீரத்திருவிளையாடல்களை நடாத்தும்போது பைரவரின் திருக்கோலத்திலேயே காட்சிதந்ததாக புராணங்கள் கூறும். பைரவருக்கு இரண்டு பெயர்களுண்டு. ஆணவங்கொண்டு அனியாயம் செய்பவர்களை அழிப்பதனால் அமர்தகர் என்றும், தன்பக்தர்கள் தம்மை அறியாமல் செய்யும் தவறுகளை, பாபங்களை நீக்குவதால் பாப ப~ணர் என்றும் அழைக்கப்படுகிறார்.

பைரவர் பாம்பை நூலாகக்கொண்டும் தலையில் சந்திரனை தரித்தும், சூலாயுதம், மழு, பாசம், தண்டம் என்பன ஏந்தியும் நாயை வாகனமாகக்கொண்டும் அருட்காட்சி தருகிறார்.

பைரவர் சனிஸ்வரனின் ஆசிரியராதலால் சனிபகவானால் ஏற்படும் தீங்குகள், துன்பங்கள் நீங்கி நலம்பெறலாம் அத்துடன் கெட்ட பேய் பிசாசு ஆதிக்கத்திலிருந்து விடுபட பைரவரைத் வணங்கி விரதம் இயற்றலாம்.

பைரவருக்கு உகந்தநாட்களாக ஒவ்வொருமாதமும்வரும் தேய்பிறையை நோக்கிய அஸ்டமி தினம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் கார்த்திகையில் வரும் தேய்பிறை நோக்கிய அஸ்டமி தினம் பைரவருக்குகந்த மிகவிசேட தினமாகக் கூறப்படுகிறது.

காசியிலே மிகமுக்கிய தெய்வமாக பைரவசுவாமி போற்றப்படுகின்றார் காசிசெல்லும் அடியார்கள் கங்கையில் நீராடி வணங்கியபின் காசியிலுள்ள காலபைரவரை வணங்காது திரும்புவாராகில் அவர்தம் யாத்திரை முழுமையடைந்ததாகக் கருதப்படமாட்டாது எனப்பெரியோர் கூறுவார்கள்.

எனவே சிவபெருமானின் இன்னொரு வடிவாக நின்று அருள்தரும் பைரவப்பெருமானை துதித்து விரதமிருந்து நற்பேறு பெறுவோமாக.

விரதநாட்கள்.

2022ம் ஆண்டுக்கான விரதநாட்கள்:

25/01/2022                    24/02/2022            25/03/2022


23/04/2022                  23/05/2022              21/06/2022


21/07/2022              19/07/2022             19/08/2022


18/09/2022                 17/10/2022            16/11/2022

16/12/2022